தானேயில் கிணற்றில் மிதந்த மூதாட்டி உடல் மீட்பு- போலீசார் விசாரணை

தானே கோல்சேட் சித்தேஷ்வர் கார்டன் சொசைட்டி பகுதியில் கிணற்றில் மிதந்த மூதாட்டி உடல் மீட்பு;

Update:2022-09-07 17:58 IST

தானே,

தானே கோல்சேட் சித்தேஷ்வர் கார்டன் சொசைட்டி பகுதியில் உள்ள கிணற்றில் பெண்ணின் உடல் மிதப்பதாக நேற்று காப்பூர்பாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தானே பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு குழுவினருடன் போலீசார் அங்கு சென்றனர். கிணற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சாரதா முரளிதர் (வயது 65) என்ற மூதாட்டி என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்