வசாய்,
பால்கர் மாவட்டம் வாடா தாலுகா கோராட் கிராமத்தில் சுவர் ஒன்றில் பழுதுபார்க்கும் பணி நடந்து வந்தது. கட்டுமான பணியில் தொழிலாளிகள் பலிராம் தும்பாடா(வயது55), பார்கு சிரோடே(58) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக சுவர் திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 தொழிலாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வாடா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.