புனே,
புனே மருஞ்சி பகுதியை சேர்ந்தவர் சுவப்னில் படலே. மல்யுத்த வீரரான இவர் நேற்று உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் நடத்திய பரிசோதனையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தார்.
மல்யுத்த வீரர் சுவப்னில் படலே உயிரிழந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் சமீபத்தில் மராட்டிய சாம்பியன் பட்டம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.