இந்திய விமான நிறுவனத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் (ஏ.ஏ.ஐ) 596 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Update: 2023-01-13 14:12 GMT

சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் மற்றும் டெலி கம்ப்யூனிகேஷன், ஆர்க்கிடெக்சர் போன்ற துறை சார்ந்த பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

21-1-2023 அன்றைய தேதிப்படி 27 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேட் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை அமைந்திருக்கும்.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.aai.aero என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-1-2023.

Tags:    

மேலும் செய்திகள்