ஏர்டோப்ஸ் 100 வயர்லெஸ் இயர்போன்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் புதிதாக ஏர்டோப்ஸ் 100 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-11-27 19:49 IST

இதன் விலை சுமார் ரூ.1,299. அழகிய வடிவிலான இந்த இயர்போன் நீலம், கருப்பு, பச்சை ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

இதில் புளூடூத் 5.2 இணைப்பு வசதி உள்ளது. இதற்குரிய பெட்டியிலிருந்து எடுத்த உடனேயே உங்களது ஸ்மார்ட்போனுடன் இது இணைப்பை பெறும். இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 50 மணி நேரம் செயல்படும். கூகுள் குரல் வழிகட்டுப்பாட்டிலும் இது இயங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்