முடி வளர்ச்சிக்கு...

வயது, மரபணு மற்றும் உணவு முறை ஆகியவற்றை பொறுத்து மனிதர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு அங்குலம் வரை முடி வளரும்.

Update: 2022-08-11 13:45 GMT

அதனால் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்துவிடலாம். அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்கள்:

ஆளி விதைகள்: இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அவை உடலுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் நன்மை பயக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் 6,400 மில்லி கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளடங்கி இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது முடியை வலுப்படுத்தவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வழிவகை செய்யும்.

நெல்லிக்காய்: இது பல்வேறு விதமான மருத்துவ குணங்களை கொண்டது. முடி வளர்ச்சிக்கும் துணை புரியக்கூடியது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கொலோஜன் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்வதற்கு உதவும்.

கறிவேப்பிலை: சமையலில் தவறாமல் இடம் பெறும் இதனை முடி வளர்ச்சிக்கும் தவறாமல் பயன்படுத்தி வரலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை தலைமுடி நீளமாக வளர உதவும். கூந்தல் பளபளப்பாக காட்சி தருவதற்கும் வழிவகுக்கும். ஒரு டம்ளர் காய்கறி சாற்றில் 10-15 கறிவேப்பிலைகளையும் சேர்த்து பருகி வரலாம். அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக் கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்