வாழ்க்கையை வசந்தமாக்கும் இயற்கை

கேரளாவைச் சேர்ந்த அன்சியா, 2017-ம் ஆண்டிலிருந்து இயற்கைப் பொருட்களில் இருந்து அழகு சாதனப் பொருட்களை தயாரித்து வருகிறார். தந்தை குடும்பத்தை கைவிட்டுச் சென்ற பிறகு, தாயார் அரவணைப்பில்தான் அன்சியா வளர்ந்தார்.;

Update:2022-08-14 18:02 IST

அழகுசாதனப் பொருட்களை இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிப்பது பற்றிய நுட்பங்களை தாயாரிடம் கற்றுத் தேர்ந்தார்.

இயற்கை அழகுசாதனப் பொருட்கள்

இன்றைக்கு இயற்கை அழகுசாதனப் பொருட்களைத் தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்துவருகிறார் அன்சியா. இதுபற்றி பேசிய அவர், "எங்களுக்கு ஆயுர்வேத எண்ணெய்யை அம்மா தயாரித்துக் கொடுப்பார். தேங்காய் எண்ணெய்யில் மூலிகைகளை கலந்து உருவாக்குவார். தொடர்ந்து இந்த எண்ணெய்யைப் பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைத்தது. இதுவே இயற்கைப் பொருட்களிலிருந்து எண்ணெய் மற்றும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கக் காரணமாக அமைந்தது.

யூ-டியூப்பில் வீடியோ

என் தயாரிப்புகளை யூ-டியூப்பில் பகிர்ந்தேன். அதைப் பார்த்து பலரும் பாராட்டினார்கள். ரசாயனக் கலப்பில்லாத எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று என்னிடம் பலரும் விசாரிக்கத் தொடங்கினார்கள். மக்கள் பிசியாக இருப்பதால், அவர்களுக்கு எண்ணெய் தயாரிக்க நேரம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது. என் தாயார் உதவியுடன் எண்ணெய் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களைத் தயாரித்தேன்.

25 பேருக்கு வேலைவாய்ப்பு

மலப்புரத்தில் ஓர் ஆலையை தொடங்கி 25 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளேன். தற்போது 40 வகையான அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கிறேன். இதன் மூலம் மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்.

எங்கள் தயாரிப்பில் சோப்பு, ஷாம்பு, கிரீம் மற்றும் ஜெல் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களும் அடக்கம். சமூக ஊடகங்கள் மூலம் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துகிறோம். நான் பயன்படுத்தும் மூலப்பொருட்களை வெளிப்படையாக வெளியிடுகிறேன். இதன் மூலம் ரசாயனம் ஏதும் கலக்கவில்லை என்பதை உறுதிசெய்கிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்