நோய்களுக்கு மருந்தில்லாத உளவியல் மருத்துவம்
உளவியலாளர்கள் உடல், மன நோய்களுக்கு மனத்தைக்கொண்டு மருந்தில்லாமல் குணமாக்கலாம்.
உடலின் வலியை உளவியல் சிகிச்சை மூலம் மனத்தை மாற்றியும் சரிசெய்யலாம். அதுபோல் மனப்பிரச்சினையை புரிந்துகொள்ள மனத்தை கடந்து போகலாம். உடலை மனம் பார்த்தல் எளிது. மனத்தை மனம் பார்க்க பழக்க வேண்டும். அதனால்தான் மேற்கத்திய மருத்துவ முறையினர் மனப்பிரச்சினைகளுக்கு உடல் காரணங்களை கண்டுபிடித்து சரிசெய்ய நினைக்கின்றனர். துக்கமா? அது மூளையில் உள்ள சுரப்பிகளின் குறைபாடு. அந்த சுரப்பி சுரக்க மருந்து தந்தால் துக்கம் போகும். இப்படி ஒரு வழிமுறையைதான் உளவியல் துைற முன்னெடுக்கிறது.
உளவியலாளர்கள் உடல், மன நோய்களுக்கு மனத்தைக்கொண்டு எப்படி மருந்தில்லாமல் குணமாக்கலாம் என்று நிரூபித்தனர். நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள், வாழ்க்கைமுறை என பல மாறுதல்கள் மூலம் ஆதார பிரச்சினைகளை சரிசெய்தனர். பல நேரம் கூட்டுசிகிச்சை முறைகளும் கையாளப்படுவது உண்டு. தன்னை அறியாமல் மனம் தன் தன்மையை மாற்றத் தயாராகும். இந்த விழிப்பு நிலை பெற வேண்டும் என்கிறார்கள், உளவியலாளர்கள். எனவே தன் மனத்தின் சித்து விளையாட்டுக்களை இனம் அறிந்து அதை வசப்படுத்துபவர்கள்தான் மனத்தை ஒருநிலைப்படுத்துவதில் வல்லவர்கள் என்றும் உளவியல் துறை கூறுகிறது.