வேற்றுகிரகவாசிகள் பூமியைப் உளவு பார்க்கிறார்கள் அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் நம்பிக்கை

வேற்றுகிரகவாசிகள் தங்கள் உளவாளிகளை பூமிக்கு அனுப்புவதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் பென்டகன் அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது.

Update: 2023-03-17 10:07 GMT

வாஷிங்டன்

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ர கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்.

அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரகவாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் சில வருடங்களாக விசித்திரமான நிகழ்வுகளை விசாரிக்கும் பிரிவுகளை உருவாக்கி வருகின்றனர்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் பென்டகன் தற்போது ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் தங்கள் உளவாளிகளை பூமிக்கு அனுப்புவதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களை ஆராய்வதற்கு நாசா சிறிய கருவிகளைப் பயன்படுத்துவதைப் போலவே, வேற்றுகிரகவாசிகளின் தங்கள் விண்கலங்கள் மூலம் அடையாளம் காணமுடியாத விண்கலங்கள் பூமிக்கு அனுப்பப்படலாம் என்று பென்டகனின் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பென்டகனின் ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷன் ஆபீஸின் (AARO) இயக்குனர் சீன் கிர்க்பாட்ரிக் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் தலைவர் ஆபிரகாம் லோப் ஆகியோர் மார்ச் 7 அன்று தங்கள் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.

2022 இல் உருவாக்கப்பட்ட ஏஏஆர்ஓ. வேற்றுகிரகவாசிகளை நாசா தேடுவது போலவே அவர்களும் தேடுகிறார்கள் அது வானத்தில் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, தண்ணீருக்கு அடியில் இருந்தாலும் சரி. செயல்படுவதைப் போலவே வேற்றுகிரகவாசிகளின் தாய்க்கப்பல்களும் செயல்படுகின்றன என கூறினார்.

ஏஏஆர்ஓஜூலை 2022 இல் தொடங்கப்பட்டது, மேலும் அவை பூமிக்கு அருகாமையில் இருக்கும் அடையாளம் தெரியாத பொருட்களைக் கண்காணித்து வருகின்றன.

2005 ஆம் ஆண்டில், 140 மீட்டருக்கும் அதிகமான பூமியின் சுற்றுப்பாதையில் 90 சதவீத பொருட்களைக் கண்டறிய நாசா பான் ஸ்டார்ஸ் தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்டன.

அக். 19, 2017, தொலைநோக்கிகள் ஒரு விசித்திரமான விண்மீன் பொருளைக் கண்டறிந்து அதற்கு 'ஓமுவாமுவா' என்று பெயரிட்டன.

Tags:    

மேலும் செய்திகள்