இந்திய ரெயில்வேயில் 5,696 உதவி லோகோ பைலட் பணி இடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக். என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-01-27 02:25 GMT

இந்திய ரெயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரெயில்வே தேர்வாணையம் மூலம் 5,696 உதவி லோகோ பைலட் ஆட்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தெற்கு ரெயில்வேயில் (சென்னை) 148 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 19-2-2024 அன்றைய தேதிப்படி ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக். என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1-7-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 8 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

19-2-2024 வரை ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்