எஸ்.பி.ஐ வங்கியில் வேலை

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில் 1673 நன்னடத்தை அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.;

Update:2022-10-07 20:43 IST

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர், செலவுக் கணக்காளர் போன்ற படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

1-4-2022 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-4-1992-க்கு முன்போ, 1-4-2001-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, சைக்கோமெட்ரிக் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் போன்ற இடங்களில் முதன் நிலை தேர்வும், சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மெயின் தேர்வும் நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2022. விண்ணப்பிப்பது பற்றிய முழுமையான விவரங்களை https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்