7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 20 மாணவ- மாணவிகள்

20 students enrolled in medical course in 7.5 percent quota

Update: 2022-11-15 19:30 GMT

கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். அவர்கள் படித்த பள்ளி மற்றும் பெயர் விவரம் வருமாறு :-

முகேஷ் (புதுச்சத்திரம் அரசு பள்ளி), தரண்ராஜ், ரம்யாஸ்ரீ (அண்ணாசாலை அரசு பள்ளி), ரோகிணி தங்கம் (பள்ளிபாளையம் அரசு பெண்கள் பள்ளி), பூமிகா (பாச்சல் அரசு பள்ளி), நவீன்குமார், கமலகாந்த், கவின் கண்ணா (வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளி), கார்த்திக் (திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளி), வெற்றி முருகன் (கொல்லிமலை மாதிரி பள்ளி), ஜெயபாரதி (ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளி), சுந்தரமூர்த்தி (முத்துகாப்பட்டி அரசு பள்ளி), சுந்தரி (சேந்தமங்கலம் அரசு பெண்கள் பள்ளி), வேதஸ்ரீ (பாண்டமங்கலம் அரசு பெண்கள் பள்ளி), சினகா, திரிஷா (வளையப்பட்டி அரசு பள்ளி), நாகேஷ்வரன் (திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளி), சபீத்ரா (வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளி), கோமதி (வெண்ணந்தூர் அரசு பெண்கள் பள்ளி), நித்யஸ்ரீ (எருமப்பட்டி அரசு பெண்கள் பள்ளி).

Tags:    

மேலும் செய்திகள்