108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநாடு

நெல்லையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநாடு நடந்தது.;

Update:2022-08-10 01:57 IST

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நெல்லையில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் சுடலை குமார், தென்காசி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் சுந்தர்ராஜ், முருகன், அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தென்னிந்திய பொதுச்செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, முன்னீர்பள்ளம், கங்கைகொண்டான் ஆகிய 4 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்த ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. அங்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி மீண்டும் 108 ஆம்புலன்ஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீதபற்பநல்லூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டு 6 மாதமே ஓடிய நிலையில், தற்போது அந்த ஆம்புலன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதே போல் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆட்கள் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்