திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது;

Update:2022-08-31 19:37 IST


கோவை உக்கடத்தை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 30). இவர் வீடு கட்ட தேவையான கட்டிட பொருட்களை வீட்டின் முன்பு போட்டு இருந்தார். அதில் ரூ.3 ஆயிரம் இரும்பு கம்பிகளை 2 வாலிபர்கள் திருடிவிட்டு நைசாக தப்ப முயன்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபர்களை பிடித்து உக்கடம் பெரியக்கடைவீதி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஜி.எம். நகரை சேர்ந்த அபுதாகீர் (21), நவ்சாத் (24) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்