திருச்சியில் தாழ்வாக பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு
திருச்சியில் தாழ்வாக பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருச்சி,
திருச்சி மாநகரில் தனியார் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக வட்டமடித்து கொண்டிருந்தது. திருச்சி மாநகரில் மக்கள் திடீரென வட்டமடித்த விமானத்தை கண்டு, அந்த விமானம் தரையிறங்க முடியாத நிலையில் உள்ளதோ என அதிர்ச்சி அடையும் நிலையும், பரபரப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு வார காலமாக மண்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதால், விமானம் தரையிறங்குவது மற்றும் அங்கிருந்து பறப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்விற்காக வந்த விமானம் மிகவும் தாழ்வாக பறந்தது தெரியவந்துள்ளது. ஆய்வு நிறைவு பெற மேலும் சில நாட்கள் ஆகும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.