தமிழகத்தில் 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 8 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-18 13:58 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 

இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 6 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 89 ஆயிரத்து 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 19 ஆயிரத்து 860 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 86 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சத்து 70 ஆயிரத்து 269 கொரோனா மாதிரிகள்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்