கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா பதவியேற்பு...!

கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா பதவியேற்றுக் கொண்டார்.;

Update:2022-03-04 11:45 IST
கோவை,

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. ,இதில் மொத்தம் 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. 73 இடங்களில் வெற்றி பெற்றது.

தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 9 இடங்கள், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் தலா 4 இடங்கள், அ.தி.மு.க., ம.தி.மு.க. தலா 3 இடங்கள், கொ.ம.தே.க. 2, ம.ம.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. 
தேர்ந்தெடுக்கப் பட்ட கவுன்சிலர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்ற விழாவில்  பதவி கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் விக்டோரியா ஹாலில் இன்று காலை 9.30 மணிக்கும்  தொடங்கியது.

இதில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு மேயர், துணை மேயரை தேர்வு செய்ய உள்ளனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கல்பனா என்பவர் அதிக வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கல்பனாவுக்கு கோவை மாநகராட்சியின் மேயராக பதவியேற்றுக் கொண்டர். இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மேயர் கல்பனாவுக்கு செங்கோலை வழங்கினார். 

மேலும் செய்திகள்