ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயரை நீக்க வேண்டும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தல்
ரேஷன்கார்டுகளில் உள்ள இறந்தவர்களின் பெயரை நீக்கவேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல்துறை அறிவுறுத்தியுள்ளது.;
புதுச்சேரி
ரேஷன்கார்டுகளில் உள்ள இறந்தவர்களின் பெயரை நீக்கவேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இறந்தவர் பெயர்கள்
புதுவை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இயக்குனர் சக்திவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளில் (ரேஷன் கார்டு) குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் யாரேனும் இறக்கநேரிட்டால் அதன் விவரங்களை துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து இறந்த உறுப்பினர்களின் பெயரை நீக்கம் செய்வது குடும்ப தலைவரின் கடமை ஆகும்.
வருகிற 31-ந்தேதிக்குள்...
மேலும் அவ்வாறு நீக்காமல் இருப்பது சட்டப்படி குற்றமாகும். ஆகவே இதுநாள் வரை நீக்கல் செய்யாமல் உள்ள இறந்த குடும்ப உறுப்பினர்களின் இறப்பு சான்றிதழை குடிமைப்பொருள் வழங்கல் துறையில் சமர்ப்பித்து பதிவிலிருந்து வருகிற 31-ந்தேதிக்குள் நீக்கும்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெயரை நீக்கம் செய்ய desca.py.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.