வேனில் கடத்தி வந்த 282 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே நேற்று வேனில் கடத்தி வந்த 282 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

Update: 2023-08-19 18:45 GMT

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே நேற்று வேனில் கடத்தி வந்த 282 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

வாகன சோதனை

தூத்துக்குடி தனிப்படை ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் அருகே உள்ள லூர்தம்மாள்பரத்தில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வேனில் இருந்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கரீம் (வயது 41), தாளமுத்து நகரைச் சேர்ந்த முனியசாமி (37), கே.வி.கே. நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (43), திரேஸ்புரத்தைச் சேர்ந்த ரஹீம் (52) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட சுமார் 282 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.51 ஆயிரத்து 700 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்