பழனி: அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி - கோபத்தில் வெளியேறிய தி.மு.க. எம்.எல்.ஏ.வால் பரபரப்பு
தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்து எம்.எல்.ஏ. வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
பழனி கோவிலுக்கு சொந்தமான கல்லூரியில் விழா ஒன்று நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனுமான ஐ.பி.செந்தில்குமாரும் கலந்துகொள்ள வந்தார். அப்போது, கோவில் இணை ஆணையர் அங்கு நிற்பதை பார்த்ததும், அவரிடம் சென்று, "அடிவாரம் கிரி வீதியில் ஏழை வியாபாரிகளை உள்ளே அனுமதிக்காமல் ஏன் விரட்டி அடிக்கிறீர்கள்?" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு கோவில் இணை ஆணையரும் கருத்து தெரிவித்ததால், கோபத்தில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியையே புறக்கணித்து அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. வெளியேறிய சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.