3 பேர் கைது; அழகிகள் மீட்பு

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-19 01:45 IST

செல்வபுரம்


கோவை செல்வபுரம் சவுடேஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு இரவு நேரத்தில் அடிக்கடி கார்களில் பலர் வந்து சென்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேரளா, கரூர், கோவையை சேர்ந்த 3 அழகிகளை மீட்டனர். அவர்களை வைத்து விபசாரம் நடத்திய மதுக்கரையை சேர்ந்த முருகேசன் (வயது64), மருத்துவ பிரதிநிதி மருது பாண்டியன் (39) மற்றும் தரணி (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரதீஷ்குமார், விஜய குமார், தனசேகர் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்