450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கம்பத்தில் லாரி மூலம் கொண்டு வரப்பட்ட 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-20 15:27 GMT

கம்பம் நகராட்சி பகுதிகளில் சரக்கு லாரிகளில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் மறைத்து வைத்து கொண்டு வருவதாக நகராட்சி ஆணையாளர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் சுந்தரராஜ் தலைமையில் சுகாதார அதிகாரிகள் சரக்கு லாரி அலுவலகங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள சரக்கு லாரி அலுவலகத்தில் கம்பத்தை சேர்ந்த உமர்அலி (வயது 39) என்பவருக்கு பார்சல் வந்த 5 அட்டை பெட்டிகள், 2 சாக்குபைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் என மொத்தம் 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் உமர்அலிக்கு 10 ஆயிரமும், லாரி அலுவலகத்திற்கு ரூ.1,000-மும் சுகாதரத்துறையினர் அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதரத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்

இதேபோல் மாலையம்மாள்புரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் வைத்திருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்