கோழியை விழுங்க வந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே கோழியை விழுங்க வந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2023-10-24 13:48 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே பையனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் முகமது சர்தார் (வயது 70), விவசாயி. இவருக்கு சொந்தமான கோழிகள் அவரது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலத்தில் சத்தம் கேட்டு வந்த இடத்தில் முகமது சர்தாரின் பேத்தி பார்த்த போது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்க வந்தது தெரியவந்தது. இதனால் அவர் சத்தம் போடவே வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே வந்து கோழியை மீட்டனர். இது குறித்து முகமது சர்தார், உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனை அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்