கோவில்களில் ஆடிப்பூர விழா

வளவனூர், விக்கிரவாண்டி பகுதி கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.;

Update:2022-08-02 22:42 IST

விழுப்புரம், 

விழுப்புரம்அடுத்த வளவனூர் அக்ரஹாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேதவல்லி நாயகி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு உற்சவர் ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆராவமுதன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். இதேபோல் விக்கிரவாண்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விக்கிரவாண்டி ஆற்காட்டம்மன் கோவில், புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்