பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்

கூடலூர்-லோயர்கேம்ப் சாலையில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-03 00:00 GMT

கூடலூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் லோயர்கேம்ப் அமைந்துள்ளது. கூடலூர்-லோயர்கேம்ப் இடையேயான சாலையின் இருபக்கமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் முதிர்ச்சி அடைந்து வளர்ச்சி இல்லாமல் பட்டுப்போன மரங்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. இந்த காய்ந்த மரங்கள் மழை காலத்திலோ அல்லது பலத்த காற்று வீசும்போதோ முறிந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு செல்ல இந்த சாலை பிரதான வழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட ஜீப்களில் தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர். இதுதவிர கேரள மாநிலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள், புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வாகனங்களும் சென்று வருகின்றன. எனவே விபத்து ஏற்படுத்தும் வகையில் கூடலூர்-லோயர்கேம்ப் சாலையில் உள்ள மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்