விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-07 19:00 GMT

100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள கூலியான ரூ.281-ஐ முழுமையாக வழங்க வேண்டும். வேலை நடைபெறும் இடத்துக்கு காலை 8 மணிக்கு வந்து விட வேண்டும் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகளை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மூர்த்தி, நகர தலைவர் பக்கிரிசாமி, நகர செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜவகர், நகர செயலாளர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் கொரடாச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கேசவராஜ், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், விவசாய சங்க துணைத்தலைவர் பன்னீர்செல்வம், பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்