பணி நியமன ஆணை

பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.;

Update:2022-09-16 01:43 IST

தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க. சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்படி விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு மக்களை சந்தித்து குறைகள் கேட்டார். அப்போது சிவகாசி அருகே உள்ள ஆனையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டிதேவி, தனது மாற்றுத்திறனாளி மகனுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் தனக்கு உதவி செய்யும் படி மு.க.ஸ்டாலினிடம் ேகாரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்து தற்போது அவருக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்