திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை நலமாக உள்ளது என அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை நலமாக உள்ளது என அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.;

Update:2023-09-29 00:15 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை காலில் உன்னிகள் கூடுகட்டியதாக சமூகவலை தளங்களில் செய்திகள் பரவியது. இதை தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் யானைக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில், அது வீண் வதந்தி என்றும், யாரோ சிலர் தவறான தகவலை பரப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் கூறுகையில், யானை மாதந்தோறும் முறையாக கால்நடை டாக்டர்களால் பரிசோதனை செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் தற்போது பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலின் வளர்ச்சியை தாங்க முடியாத சிலர் வீண்வதந்தி பரப்பியுள்ளனர். மனிதர்களுக்கு ஓரே இடத்தில் உராய்வு ஏற்படும் போது, காய்ப்பு பிடிப்பது வழக்கம். அதே போல் தான் யானை படுத்து எழும்பும் போது முட்டி போடும். அதில் உள்ள காய்ப்பு தானே தவிர, வேறு ஏதும் கிடையாது. தெய்வானை யானை நலமாக உள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்