நாங்குநேரியில் கரடி நடமாட்டம்

நாங்குநேரியில் கரடி நடமாட்டம் காரணமாக கூண்டு வைக்கப்பட்டது.;

Update:2023-06-12 01:21 IST

நாங்குநேரி்

நாங்குநேரி ரெயில்வே பாதைக்கு கீழ் பகுதியில் உள்ள தோட்டம் அருகே நேற்று மதியம் 2 மணி அளவில் கரடி வந்தது. இதை பார்த்த ெபாதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த பகுதியில் கரடியை பிடிப்பதற்காக அந்த பகுதியில் கூண்டு வைத்தனர். நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த் அங்கு வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்