காங்கிரஸ் சார்பில் 100 அடி கொடிக்கம்பம் அமைக்க பூமி பூஜை
திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் 100 அடி கொடிக்கம்பம் அமைக்க பூமி பூஜை நடந்தது.;
திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் 100 அடி கொடிக்கம்பம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோடு ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரே காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான மைதானத்தில் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக 100 அடி உயர கொடி கம்பம் அமைக்கும் பணிக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், மும்மத முறைப்படி பூமி பூஜை போட்டு பிரார்த்தனை நடத்தி பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பாரத் தலைமை வகித்து பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் கணேஷ்மல், குமரேசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் வெங்கடேசன், பாரிவள்ளல், கணேஷ், கமல்கான், சத்தியமூர்த்தி, டாக்டர் செல்வராஜ், ஒன்றிய தலைவர்கள் ஜாவித் தண்டபாணி, முனுசாமி, சாந்தசீலன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட தலைவர் ச.பிரபு கூறுகையில், ''திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக 100 அடி உயர காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி சொத்து பாதுகாப்பு குழு தலைவர் விஜய் இந்தர் சிங் எம்.பி. திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கட்சி 1947 கட்டப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்து அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளார். விரைவில் அந்த பகுதியில் புதிய நகர காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டப்பட உள்ளது'' என்றார்.
முடிவில் நகர பொருளாளர் ஆர்.விஜயராகவன் நன்றி கூறினார்.