திருவாடானை யூனியனில் இருந்து 100 வாகனங்களில் பா.ஜனதாவினர் செல்ல முடிவு
ராமேசுவரம் வரும் அண்ணாமலைைய வரவேற்க திருவாடானை யூனியனில் இருந்து 100 வாகனங்களில் பா.ஜனதாவினர் செல்ல முடிவு எடுத்து உள்ளனர்.;
தொண்டி,
திருவாடானை கிழக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாடானை யூனியனில் கடம்பாகுடி, தளிர் மருங்கூர், ஓரியூர், தொண்டி, புதுக்குடி, கலியநகரி,எஸ்.பி.பட்டினம், புல்லக்கடம்பன் நம்புதாளை, முள்ளிமுனை, திருவெற்றியூர், ஆதியூர் ஆகிய கிராமங்களில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்தி, திருவாடானை பா.ஜனதா கிழக்கு ஒன்றிய தலைவர் துரை ஜெயபாண்டி ஆகியோர் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களை நேரில் சந்தித்தனர். அப்போது வருகிற 28-ந் தேதி ராமேசுவரத்திற்கு வரும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பா.ஜனதா தொண்டர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து திருவாடானை ஒன்றியத்தின் சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவேற்க 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது என பா.ஜனதா நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதில் பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் அழகர், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ரமணன், தொண்டி தங்கராஜ், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் அஞ்சுகோட்டை ரமேஷ், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் சம்பத், ஒன்றிய பொருளாளர் கண்ணன், மாவட்ட பிரசார அணி துணைத்தலைவர் கோபிநாத் கதிரேசன், ஒன்றிய துணைத்தலைவர் ராஜ்குமார், சக்திவேல் ரவிக்குல ராமன் மாரிமுத்து, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.