பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் - மத்திய இணை மந்திரி எல். முருகன் பேச்சு
2047க்குள் நாம் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.;
கோவை,
கோவையில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஸ்போர்ட்ஸ் மஹாட்ச்வ் ( SPORTS MAHOTSAV) 2025" விளையாட்டு போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் விழாவில் பேசியதாவது:
இன்றைக்கு நாம் ஜெயிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நாளைக்கு அதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சிப் பாதையில் இந்தியா. பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு உயர வேண்டும். காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும். ஒலிம்பிக்கில் நீங்கள் அனைவரும் வெல்ல வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் பெரிய அளவிலான போட்டிகளை நடத்துவோம். 100-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது 2047க்குள் நாம் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.