ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு - தமிழ்நாடு அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-05 08:23 GMT

சென்னை,

தமிழகத்தில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில மேல்முறையீட்டு மனுகள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அணிவகுப்பு ஊர்வலத்தை 29-ம் தேதி நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி அளிக்க விண்ணப்பங்கள் தந்தது ஏற்புடையதல்ல என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அனைத்து போராட்டங்களுக்கும் இதே அணுகுமுறையைதான் காவல்துறை பின்பற்றுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்டதை அடுத்து தமிழ்நாடு அரசு, காவல்துறை வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்