சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி

பத்மநாபபுரத்தில் கோவில்களில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி;

Update:2023-04-16 01:49 IST

தக்கலை, 

தமிழகத்தில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டான சித்திரை 1-ந் தேதி சித்திைர விஷூ பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுவதைபோல் கேரள மாநிலத்தில் நேற்று மேடம் மாதம் பிறந்ததையொட்டி அங்கு விஷு பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடினார்கள். இதனையொட்டி அங்கு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இந்த விஷூ பண்டிகையை தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்களும் நேற்று கொண்டாடினார்கள். காலையில் எழுந்தவுடன் சாமிக்கு படைக்கப்பட்டிருக்கும் காய், கனிகள் போன்றவற்றை காணும் வஷு கனி காணும் நிகழ்வும், பெரியவர்கள் கை நீட்டம் வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் பத்மநாபபுரத்தில் உள்ள வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள ராமசாமி கோவில், பெருமாள் கோவில், அதுபோல் தக்கலையில் உள்ள பெருமாள் கோவில், பார்த்தசாரதி கோவில் போன்றவற்றிலும் கனி காணும் நிகழ்ச்சியும் கை நீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்