கிருஷ்ணகிரி: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் காயம்

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update:2025-12-20 16:02 IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட கார் இன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பயணித்தனர்.

ஊத்தரங்கரை அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது இந்த கார் மோதியது. இந்த கோர விபத்தில் 2 கார்களிலும் பயணித்த 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்