மயிலாடுதுறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னார்வ காவலர் குழுமத்தின் சார்பில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரப்பாண்டியன், நகர சபை உறுப்பினர்கள் சதீஸ்குமார், தனலட்சுமி, உஷா, ஆனந்தி, தன்னார்வ காவலர் குழும அலுவலக மேலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.