மங்களபுரம் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

மங்களபுரம் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

Update: 2022-09-19 18:45 GMT

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மங்களபுரம் கிராம மக்கள் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் மங்களபுரத்தில் 30 ஆண்டுகளாக விதிமீறல்களுடன் சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியார் தொழிற்சாலை கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஆலை நிர்வாகம் பல்வேறு வகையிலும் முயற்சித்து வருகிறது. ஆனால் அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இதுவரை தொழில் வரியையும், சொத்து வரியையும் முறையாக செலுத்தவில்லை. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. நீர்வளம் பாதிக்கிறது.

சட்டவிரோதமாக செயல்பட்ட ஆலை நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் ஆலையை திறக்க பல்வேறு துறை அதிகாரிகள் உதவி செய்து வருவதாக தெரிகிறது. அது எங்களுக்கு வேதனையாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்காக்க ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்