இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

அருந்தவம்புலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.;

Update:2023-03-21 00:15 IST

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகிகள் மங்கையர்க்கரசி, முருகானந்தம், வீராசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.1 லட்சத்தை ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்