மக்கள் நலன் சார்ந்து மன்னன் செயல்பட வேண்டும் - கோர்ட்டில் மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்;

Update:2025-12-17 20:05 IST

மதுரை,

சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த மலர்விழி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டிற்கு வேலைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாகவும், அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை சார்பில் இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில், இதனை உயர்த்தி வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “தனது குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை. மன்னன் என்பவன் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும்” என்று மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் ஏழை என்பதால், அவரது வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு சட்டப்போராட்டம் நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்