2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவிற்கு கடத்த முயன்ற 2¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வை யில், பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் நேற்று உக்கடம் ஜி.எம். நகர், கரும்புக்கடை, கோட்டை புதூர் உள்ளிட்ட இடங்களில் ரோந்து சென்றனர்.
அப்போது கோட்டைபுதூர் ஜமீன்தார் நகரில் உள்ள ஒரு கார் செட்டில் மினி வேனில் 50 மூட்டைகளில் 2¼ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இடத்தின் உரிமையாளர் ஜபருல்லா, கேரளாவிற்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த போத்தனூரை சேர்ந்த நிஜாம் என்ற நிஜாமுதீன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.