கூட்டுறவு சங்கங்களில் பருத்தி ஏலம்

சீர்காழியில் கூட்டுறவு சங்கங்களில் பருத்தி ஏலம் நடக்கிறது.

Update: 2023-08-04 18:45 GMT

சீர்காழி:

கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி விவசாயிகளின் நலன் கருதி, சீர்காழியில், சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள வின்சிட்டி நகரில், சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் வாரம்தோறும் திங்கட் கிழமையிலும், அதேபோல மயிலாடுதுறையில், மயிலாடுதுறை கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் சோழம்பேட்டையில் சனிக்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏல நடவடிக்கையில் வியாபாரிகள் மற்றும் ஆலை அதிபர்கள் பலர் கலந்து கொள்வதால், விவசாயிகளுக்கு கூடுதலான விலை கிடைக்கிறது. எனவே பருத்தி விவசாயிகள் மேற்கண்ட கிழமைகளில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெற கூட்டுறவு துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பருத்திக்கு உரிய விற்பனை தொகை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் சங்கம் மூலம் வரவு வைக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வட்ட பருத்தி விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்