சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசியில் சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
தென்காசி:
தென்காசி அருகே மேலகரத்தில் உள்ள இந்திய நாடார்கள் பேரமைப்பின் மண்டல அலுவலகத்தில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் முன்னிலை வகித்தார். தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், தென்காசி வியாபாரிகள் நலச் சங்க தலைவர் மாரியப்பன் மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.