சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-25 10:35 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் வழியாக ஈரோடு, சங்ககிரி, சேலம், பவானி, கொடுமுடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பஸ் நிலையத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் சென்று வருகின்றன. மில்களுக்கு வந்து செல்லும் சரக்கு வாகனங்கள், பணியாளர்களை கூட்டி செல்லும் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாக சென்று வருகின்றன. வெள்ளகோவில் பஸ் நிலையம் அருகே மாத கணக்கில் தார் ரோடு சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றன.

மழை பெய்யும் போது மழை நீர் சேதமான ரோட்டில் மழை நீர் நிற்பதால் அந்த இடத்தில் சேதம் அடைந்திருப்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்வோரும் கீழே விழ வேண்டிய நிலை உள்ளது. ஆகவே உடனே சேதமான ரோட்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--------

Tags:    

மேலும் செய்திகள்