உயிருடன் இருக்கும் போது இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

உயிருடன் இருக்கும் போது இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-09-20 18:45 GMT

காரைக்குடியை அடுத்த கண்டனூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). இவர் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

என்னுடைய மனைவி நதியா ஸ்ரீ (36). எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மன வேறுபாடு காரணமாக கடந்த 2018-ல் விவகாரத்து பெற்று விட்டோம். இந்நிலையில் அவர் கடந்த 2015 நவம்பர் 24 அன்று நான் இறந்து விட்டதாக காரைக்குடி நகராட்சியில் பதிவு செய்து இறப்பு சான்றிதழை பெற்றுள்ளார். அதன் மூலம் வருவாய்த்துறையில் வாரிசு சான்றிதழும் வாங்கி என்னுடைய மைனர் குழந்தைகளுக்கு தன்னை வாரிசாக காண்பித்துள்ளார்.

இதை வைத்து எனக்கு சொந்தமாக மாத்தூரில் இருந்த காலி மனையை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் நதியா ஸ்ரீ செய்த விற்பனை பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நான் இறந்ததாக சான்றிதழ் வழங்கிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கிய வருவாய் துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்துள்ளேன். இதுவரை நடவடிக்கை இல்லை, எனவே இதில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்