மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்;

Update:2022-05-19 03:17 IST

நெல்லை:மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

நெல்லை மேலப்பாளையம் கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மேலப்பாளையம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்