இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-20 18:45 GMT

திருக்கடையூர்:

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டித்து, திருக்கடையூர் கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் மற்றும் மாவட்ட செயலர் அறிவழகன் ஆகியோர் மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்