நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிதிராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update:2023-08-23 00:15 IST


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை திராவிடர் கழக மாணவர், இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவக் கல்வி உரிமையை நிலைநாட்ட நீட் தேர்வு ரத்து தேவை என்பதை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். விழுப்புரம் நகர செயலாளர் பழனிவேல் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்பராயன், செயலாளர் அரங்க.பரணிதரன், அமைப்பாளர் கோபண்ணா, நகர தலைவர் பூங்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் அஜித்தா, கிருஷ்ணபாண்டி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சக்கரவர்த்தி, பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை.திருநாவுக்கரசு, அமைப்பாளர் கார்வண்ணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் கீதா, மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு, துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வசந்த்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்