புதிய தாலுகா உருவாக்க கோரி ஆர்ப்பாட்டம்
ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.;
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் கிராமத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க கோரி ரிஷிவந்தியம் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரிஷிவந்தியம் சனிமூளை பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள் கலந்து கொண்டு, புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என கோஷமிட்டனர். அதுசமயம் ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.