வெறிநாய் கடித்து 8 பேர் காயம் - நாகையில் அதிர்ச்சி
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.;
நாகை,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சாலையில் சென்றவர்களை வெறிநாய் துரத்தி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் நாய்கள் அதிகம் உள்ளதாகவும், சாலையில் நடந்து செல்வர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நாய்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட 8 பேர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.