குறிச்சி குளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை

பருவமழையை முன்னிட்டு குறிச்சி குளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-09-09 00:45 IST

குறிச்சி, செப்

கோவை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி தலைமையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குறிச்சி குளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கோவை தெற்கு தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று நீரில் மூழ்கியவர்களை ரப்பர் படகு, உபகரணஙகள் மூலம் காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளித்தனர்.

மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக், மரப்பொருட்களை வைத்து மீண்டு வருவது எப்படி என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்